Sunday, September 8, 2013

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 43 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்: சரத் பவார்

 

கஸ்டு 6ம் தேதி கூடிய நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் கூறியதாவது, நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 43,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்று கூறினார்.

இந்த தகவல் அதிர்ச்சி தருவதாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தற்கொலையின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு வருடத்தையும் கணக்கிடும் பொழுது 2010ல் 15,964 பேரும், 2011ல் 14,627 பேரும், 2012ல் 13,754 பேரும் தற்கொலை செய்துள்ளனர் என்று அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டார்.

இதில், அதிகபட்சமாக 10,264 விவசாயிகள் மஹாராஷ்டிராவிலும், அதைத்தொடர்ந்து 8,560 விவசாயிகள் கர்நாடகாவிலும், 7,303 விவசாயிகள் ஆந்திராவிலும், 3,735 விவசாயிகள் மத்திய பிரதேசத்திலும் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தற்கொலைக்கு முக்கிய காரணமாக, குடும்ப பிரச்சனை, உடல்நலக்குறைவுகள், போதைப் பொருள் மற்றும் மதுபானம் அருந்துதல், வேலையின்மை, விவசாயத்தில் நஷ்டம், கடன் பிரச்சனை, நிலங்களை கையகப்படுத்துதல், வறுமை போன்ற பல்வேறு காரணங்களுக்காக விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர் என்றார்.

இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விவசாயிகளை பாதுகாத்து, அவர்களுக்கு மறுசீரமைப்பை செய்ய, அரசு 20,000 கோடி நிதியை ஆந்திரா பிரதேஷ், கர்நாடகா, மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ளது என்று சரத் பவார் பதிலளித்தார்.

The Milli Gazette 1-15 September 2013

தமிழில் - நெல்லை சலிம்

 

Suicide by more than 43 thousand farmers in three years

The Milli Gazette
Published Online: Aug 27, 2013
Print Issue: 1-15 September 2013

New Delhi: Union minister for agriculture Sharad Pawar said in a written reply to a question in the Lok Sabha on 6 August that as many as 43,745 farmers committed suicide in the country during the past three years because of different reasons. Giving break-up figures yearwise he said that 15964 farmers committed suicide in 2010, 14 627 farmers in 2011 and 13754 committed suicide in 2012. He further said that maximum number i.e. 10,264 farmers committed suicide in Maharashtra, followed by 8,560 in Karnataka, 7303 in Andhra Pradesh, and 3735 farmers in Madhya Pradesh. He said that among the reasons for suicides were family problems, illness, the curse of drugs and intoxicating drinks, unemployment, failure of crops and resultant financial losses, inability to repay loans, property disputes, bankruptcy, poverty etc. He said that government (his ministry) has given a package of a total of about Rs 20,000 crores to Andhra Pradesh, Karnataka, Madhya Pradesh and Maharashtra towards rehabilitation and removal of difficulties of farmers.

This article appeared in The Milli Gazette print issue of 1-15 September 2013 on page no. 3

No comments:

Post a Comment