Monday, September 23, 2013

மனச்சாட்சியற்ற அரசுகளை அம்பலப்படுத்தும் "Fabricated" ஆவணப்படம்

 

நெல்லை சலிம்

image

இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர்கள், சமூக போராளிகள், எழுத்தாளர்கள் என்று அநீதிக்குள்ளாக்கப்படும் மக்களுக்கெதிராக போராடுபவர்கள் மீது, அரசு பொய் வழக்குகள் போட்டு சிறையில் தள்ளுவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக, அப்துல் நாசர் மதானி, பினாயக் சென், சோனம் சோரி, எஸ்.ஏ.ஆர். ஜீலானி, சுப.உதயகுமார் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இதுபோன்ற அவலங்களை எடுத்துரைக்கும் "Fabricated" என்ற ஆவணப்படத்தை கார்ட்டூனிஸ்ட் கே.பி. சசி அவர்கள் எடுத்துள்ளார்கள்.

இந்த ஆவணப்படத்தின் திரையிடல் நிகழ்ச்சி 21.09.2013 அன்று,  சென்னையில் உள்ள ஸ்பென்சர் பிளாசிவிற்கு எதிரில் உள்ள புக் பாயிண்டில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் ஓடும் இந்த படம் வந்திருந்தவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. திரையிடலுக்குப் பின் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்சசி ஒருங்கிணைப்பாளர் அமுதன், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மணிவண்ணன், ஆளுர் ஷாநவாஸ், இயக்குநர் கே.பி. சசி ஆகியோர் உரையாற்றினர்.

இந்தியாவில் பொய்வழக்குகளால் பதிக்கப்பட்டவர்களின் அவலங்களை எடுத்துரைக்கும் இந்தப் படம், குறிப்பாக கேரளாவின் அப்துல் நாசர் மதானியின் வாழ்க்கையை எடுத்துரைக்கிறது. மதானி கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பொய்யான குற்றச்சாட்டின் மூலம் கைது செய்யப்பட்டு எட்டு வருடங்களுக்கும் மேலாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் கழிக்கிறார்.

இந்தப் படத்தை பார்த்தவர்களின் கண்கள் கண்ணீரை வரவழைக்கும் விதமாக இருந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி பேட்டிகள், அவர்கள் பட்ட அவலங்களை எடுத்துரைக்கும் விதம், அரசு செய்யும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் போது,  நம்மீதும் இதுபோன்ற பொய் வழக்குகள் போடப்படலாம் என்பதை ெளிவுபடுத்துகிறது இந்த ஆவணப்படம்.

அப்துல் நாசர் மதானி அவர்களின் தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளின் நேர்காணல், அரசுகளுக்கு இன்னும் மனசாட்சி கிடையாது என்பதை எடுத்தியம்புகிறது. இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் கே.பி. சசி அவர்கள் அருமையான முறையில் இயக்கி உள்ளார். இந்தப் ஆவணப்படத்தை நாம் மட்டுமல்லாது, பொது சமூகங்களுக்கு மத்தியில் விவாதமாக மாற்ற வேண்டும். இந்தப் ஆவணப்படத்தை பார்க்க விரும்புவோர், இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.youtube.com/watch?v=XPSFTrlJGJc

No comments:

Post a Comment