கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 08 டிசம்பர் 2013
ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கும், இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியுமான சுனில் ஜோஷியை ரகசியங்கள் கசியாமலிருக்க ஹிந்துத்துவா அமைப்பே கொலை செய்துள்ளது என என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை சுனில் ஜோஷியின் தலைமையிலான ஹிந்துத்துவா தீவிரவாத குழுவினர் தாம் நடத்தியுள்ளனர் என்பதை தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்டறிந்தனர்.
மேலும் இந்த குண்டுவெடிப்புக்கு சூத்திரதாரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரச்சாரக் சுனில்ஜோஷி என்பதை கண்டறிந்தது என்.ஐ.ஏ.
இந்நிலையில் சுனில்ஜோஷி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டான். இதனை விசாரித்த என்.ஐ.ஏ, போலீஸில் சரணடைய சுனில் ஜோஷி முடிவெடுத்த நிலையில், ஹிந்துத்துவ பயங்கரவாத அமைப்பினர் மத்தியில் உருவான கருத்துவேறுபாடு முற்றிப்போய் சுனில் ஜோஷியை கொலைச் செய்ய தீர்மானித்துள்ளனர். இதையடுத்து சுனில்ஜோஷி முயற்சியால் ஹிந்துத்துவாவுக்குள் கொண்டுவரப்பட்ட ராஜேந்திர பஹல்வான், லோகேஷ் ஷர்மா ஆகிய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் 2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேவாஸில் வைத்து ஜோஷியை கொலைச் செய்தனர். என்பதை கண்டறிந்தனர்.
சுனில் ஜோஷி கொலைக்கு உபயோகித்த இரண்டு பிஸ்டல்களை என்.ஐ.ஏ கைப்பற்றியுள்ளது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள திலீப் ஜக்தாபிடம் நடத்திய விசாரணையில் பிஸ்டல்கள் குறித்த தகவல்கள் கிடைத்தன.
சுனில் ஜோஷி கொலைச் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி அமைப்பான யுவமோர்ச்சாவின் பிரபல தலைவரும், வழக்குரைஞருமான ஜிதேந்திர சர்மாவை என்.ஐ.ஏ, கடந்த வாரம் கைது செய்திருந்தது. இவ்வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படும் என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://newindia.tv/tn/india/141-crime/2467-nia-sunil-joshi-murder-case
No comments:
Post a Comment