Wednesday, September 25, 2013

இந்தியாவில் இஸ்ரேலின் அதிகாரம்!


நெல்லை சலிம்

Indo isreal

 லக்கியச்சோலை பதிப்பகத்தின் வெளியீடான “இஸ்ரேலிய உறவின் விபரீதங்கள்” என்ற புத்தகத்தை அண்மையி் படிக்க நேர்ந்தது. அருமையான அட்டைப்படத்துடன், பல ஆழமான கருத்துக்களை எடுத்துரைக்கும் இச்சிறிய நூல், இஸ்ரேலிய எதிர்ப்பின் கையடக்கம் எனலாம்.

எந்த ஒரு நாடும் உருவாக்கப்பட்ட பின்பு தான் அந்நாட்டிற்கு என்று உளவு அமைப்பு உருவாக்கப்படும். ஆனால், இஸ்ரேலைப் பொருத்தவரை ஒரு நாட்டை உருவாக்கவே உளவு அமைப்பு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட, இஸ்ரேலுடன் இந்தியாவின் உறவு என்பது உண்மையில் அது ஆபத்தான ஒரு செயல் என்பதை எழுத்தாளர் ரியாஸ் அஹமது அவர்கள் இந்நூலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். உதாரணமாக, ஃபலஸ்தீனியர்களின் உயிர், உடைமை, நிலம் என அனைத்தையும் நயவஞ்சகம் மற்றும் வன்முறைகள் வாயிலாக அபகரித்து தான் தங்களின் நாட்டை உருவாக்கினார்கள் என்ற அந்த வரிகள் இஸ்ரேலின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது.

இப்புத்தகம், இந்தியா ஆரம்ப கட்டத்தில் இருந்த நிலைப்பாட்டையும், தற்போதுள்ள அரசு இருந்து வரும் உறவு முறைகளையும் தெளிவாக எடுத்துரைக்கின்றது இந்நூல். இஸ்ரேலுடன் நட்பு பாராட்டுவதில் பா.ஜ.க.வும், காங்கிரசும் ஒரே நிலைப்பாடுடன் தான் இருக்கின்றார்கள் என்பதை அழகாக விளக்குகிறது.

அது மட்டுமல்லாமல், இந்தியாவில் இஸ்ரேலிதன் ஆதிக்கம் எந்தளவுக்கு பறந்து விரிந்துள்ளது என்பதையும், இதில் படித்த முஸ்லிம்கள் சிக்க வைக்கப்படுகிறார்கள் என்பதையும் தெளிவாகவும்விளக்கமாகவும் வாசிப்பவர்களின் உள்ளத்தை அபகரிப்பதாக உள்ளது. உதாரணமாக, டெல்லி குண்டுவெடிப்பில் பத்திரிகையாளர் காஸ்மியை சிக்க வைக்கப்படுவதை  கூறலாம்.

இஸ்ரேலிய பற்றிய எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்த போதிலும், இது மற்ற புத்தகங்களை விட மாறுபடுவது என்னவெனில், இது இந்தியாவில் இஸ்ரேலின் ஆதிக்கத்தையும், வலுவாக பதிந்துள்ள அதன் கரங்களையும் எடுத்துரைக்கின்றது. குறிப்பாக, கேரளா மட்டான்சேரி ‘யூத நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்று யூதர்கள் பல்வேறு நகரங்களிலும், மாநிலங்களிலும் வலுவாக கால் பதித்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

வருங்காலங்களிலாவது இந்தியா அணிசேராக் கொள்கையின் உறுதியாக நிற்க வேண்டும் என்பதை இப்புத்தகம் கோரிக்கையாக வைக்கிறது.

அமைதியையும் சமாதானத்தையும் குலைக்க நினைக்கும் இஸ்ரேல் போன்ற நாடுகளை பற்றிய செய்திகளை மக்களுக்கு எடுத்துரைக்க இப்புத்தகம் உதவும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்தியா  இஸ்ரேல் பற்றிய உறவுகளை அறிய இப்புத்தகம் உதவும் என்று நம்புகிறோம்.    

No comments:

Post a Comment