Tuesday, September 3, 2013

இந்திய உளவுத்துறையும் ஆர்.எஸ்.எஸ்.ம் தான் இந்தியாவில் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் - மஹாராஷ்டிரா முன்னாள் ஐ.ஜி. எஸ்.எம். முஷ்ரிப் குற்றச்சாட்டு

 

மஹாராஷ்டிரா முன்னாள் ஐ.ஜி. எஸ்.எம். முஷ்ரிப் சமீபத்தில் புனேவில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர் கூட்டமைப்பின் 26வது ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். இவ்விழாவின் போது, இந்திய நாட்டில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஐ.பி. ஆகிய அமைப்புகள் பெரிய தீவிரவாத அமைப்புகள் என்று குற்றம் சாட்டினார். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சிக்கவைத்து விட்டனர் என்று கூறினார்.

இப்பொழுது வரை, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து பல்வேறு இடங்களில் நடைபெற்ற 17 குண்டு வெடிப்பு வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத், மாலேகான் குண்டுவெடிப்பில் இவர்களுடைய தொடர்பு அம்பலப்படுத்தப்பட்டது. இந்த அமைப்புகளால் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டார்கள். பல இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையை இழந்தார்கள். இதற்கு உள்ளூர் காவல்துறையும் அதற்கு துணையாக இருந்தது என்று கூறினார்.

எஸ்.எம். முஷ்ரிப் அவர்கள் மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு படைத்தலைவர் (Anti Terrorism Squad & ATS) ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதில் மர்மம் இருக்கின்றது என்று அப்போதே கூறி இருந்தார். 26/11 மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலுதலின் பின்னணியில் இந்துத்துவ அமைப்புகளின் தொடர்பு இருக்கின்றது என்றார். இது தொடர்பாக "Who Killed Karkare? The Real Face of Terrorism"  “கர்கரேயை கொலை செய்தது யார்? தீவிரவாதத்தின் உண்மை முகம்” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் புத்தகம் ஒன்றை எழுதினார் எஸ்.எம். முஷ்ரிப் அவர்கள். இதில், ஐ.பி. மற்றும் இந்துத்துவ சக்திகளின் உண்மை முகத்தை தெளிவாக எடுத்துரைத்தார். 

இந்தப் புத்தகத்தில் கர்கரேயின் கொலையில் மூளையாக செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ். போன்ற அடிப்படைவாத அமைப்புகளுக்கு பங்கு உண்டு என்பதை அம்பலப்படுத்தினார். மேலும், இந்த அமைப்புகளை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்தப் புத்தகம் பின்நாட்களில் இலக்கியச்சோலை பதிப்பகத்தின் சார்பாக தமிழில் வெளிவந்தது.

அதுமட்டுமல்லாமல், இந்தப் புத்தகம் ஹிந்து, உருது, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளிவந்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. டிசம்பர் 2010 மும்பை நீதிமன்றத்தில், மஹராஷ்டிரா மாநில அரசு இந்தப் புத்தகம் பிரச்சனைகளை உருவாக்கும் என்றும், இதை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

இதை விசாரித்த டிவிசன் பென்ஞ்ச் நீதிபதிகள்  B.H. மர்லாபல்லே மற்றும் U.D. சல்வி ஆகியோர் விசாரித்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது, முஷ்ரிப் அவர்கள் இந்திய குடிமகன் என்ற அடிப்படையில் அவருடைய கருத்தை சொல்லுவதற்கு உரிமை உண்டு கூறியது.

முன்னாள் பீகார் எம்.எல்.ஏ. ராதாகண்ட் யாதவ் மற்றும் ஜோதி பெடேகர் ஆகியோர்களின் மனுக்களில் கூறியதாவது, தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதில் ஐ.பி. மற்றும் வலதுசாரி பயங்கரவாத அமைப்பான அபினவ் பாரத் போன்ற அமைப்புகளுக்கு தொடர்பிருக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

தி மில்லிகெசட், 1-15 செப்டம்பர் 2013

தமிழில் - நெல்லை சலிம் 

THE MILLIGAZETTE, 1-15 SEPTEMBER 2013

“RSS, IB biggest terror organisations”: Mushrif

The Milli Gazette
Published Online: Aug 27, 2013
Print Issue: 1-15 September 2013

Mumbai: Former Maharashtra inspector general of police S.M. Mushrif has made a sensational allegation against the Rashtriya Swayamsevak Sangh (RSS) and Intelligence Bureau (IB) calling them the biggest terrorist organisations of the country, which in connivance with the local police, plotted the implication of innocent Muslim youth in the Malegaon bomb blast case.

He was speaking at the inaugural function of the 26th state convention of the All India Backward (SC, ST, OBC) And Minority Communities Employees Federation (BAMCEF) in Pune on 27 July.

“Until now, office bearers and activists of the RSS were found involved in around 17 bomb blast cases that occurred in several cities of the country. It is being revealed that they were involved in the Hyderabad bomb blast case too,” Mr Mushrif claimed. He went on to say that innocent Muslims were being framed by these organisations in collusion with the local police.
The former IPS officer was in a major controversy pertaining to the death of former Maharashtra Anti-Terrorism Squad chief Hemant Karkare, who was killed in the 26/11 attacks in Mumbai.

In his book “Who Killed Karkare-The Real Face of Terrorism”, Mushrif had blamed some right-wing groups of being the masterminds behind Karkare’s murder, alleging that keeping him alive would have invited more probes into the right-wing terror.

In December 2010, the Bombay high court had also sought a reply from the state government on whether it had investigated the issues raised in Mr Mushrif’s book. The division bench of Justice B.H. Marlapalle and Justice U.D. Salvi had observed that the issues raised in the book were relevant and that Mr Mushrif “as a citizen has a right to air his views.”

Former Bihar MLA Radhakant Yadav and another Jyoti Bedekar in their petitions had also alleged that ATS chief Hemant Karkare’s death was orchestrated by the Intelligence Bureau (IB) personnel and members of the “right-wing terrorist outfit” Abhinav Bharat.

This article appeared in The Milli Gazette print issue of 1-15 September 2013 on page no. 4

No comments:

Post a Comment